NBFC என்பறால் என்ன?
வங்கிகளைப் போலவே தனிநபர் கடன்கள், தொழில் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பொருளாதார சேவைகளை வழங்கும் பொருட்டு நிறுவனங்கள் விதி 1956 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் NBFCகள் ஆகும். ஆனால் வங்கி உரிமம் இந்த நிறுவனங்களிடம் இருக்காது. இவை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மூலமாக ஒழுங்குபடுத்தப்பட்டு வந்தாலும் சேவிங்ஸ் அக்கவுண்ட் போன்ற டெபாசிட்கள் அல்லது செக்குகளை வழங்குவதற்கு இந்த நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. குறைவான கிரெடிட் கடன் வரலாறு அல்லது அவசர பணத் தேவைகளுக்கு வாடிக்கையாளர்களின் தேவையை NBFCகள் பூர்த்தி செய்து வருகின்றன. முதலில் இந்தியாவில் உள்ள பிரபலமான சில NBFCகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..
*டாட்டா கேப்பிட்டல்
*IIFL ஃபைனான்ஸ்
*ஆதித்யா பிர்லா கேப்பிட்டல்
*மகேந்திரா ஃபைனான்ஸ்
*HDB ஃபைனான்சியல் சர்வீசஸ்
இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய வட்டி விகிதங்கள் மற்றும் தகுதி வரம்புகளை கொண்டுள்ளன. எனவே, கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு இவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
NBFC கடன் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்…
எளிமையான தகுதி வரம்பு:
வங்கிகளுடன் ஒப்பிடும்போது NBFC கடன் பெறுவதற்கான தகுதி வரம்புகள் எளிமையானதாக இருக்கும். ஆவணங்கள், கிரெடிட் ஸ்கோர் தேவைகள் மற்றும் வருமான உச்சவரம்புகள் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். இதனால் முதல்முறையாக கடன் வாங்குபவர்கள் அல்லது சற்று குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள் NBFC கடனை எளிமையான முறையில் வாங்கலாம்.
விரைவான கடன் வழங்கல்:
வழக்கமாக NBFC ஆன்லைன் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக இயங்குகிறது. இதனால் ப்ராசஸிங் நேரம் என்பது மிகக் குறைவாக இருக்கும். ஆகையால் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்பட்ட 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கடன் தொகையானது உங்களுடைய அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும்.
பல்வேறு கடன் ஆப்ஷன்கள்:
NBFCகளிடம் தனிநபர் கடன் முதல் வீட்டை புதுப்பித்தல் மற்றும் தொழில் ரீதியான கடன்கள் என்று பல்வேறு விதமான லோன் ப்ராடக்ட்கள் கிடைக்கிறது. எனவே உங்களுக்குத் தேவையான ஒன்றை நீங்கள் தேர்வு செய்து பயனடையலாம்.
குறைவான ஆவணங்கள்:
பெரும்பாலான NBFCகள் டிஜிட்டல் முறையில் இயங்குவதால் இந்த ஒட்டுமொத்த விண்ணப்பச் செயல்முறையுமே ஆன்லைனில் செய்யப்படுகிறது. எனவே குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் முயற்சி இருந்தாலே இவர்களிடமிருந்து நீங்கள் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.
NBFC கடனுக்கான வட்டி விகிதங்கள் எப்படி இருக்கும்?
கடனைத் தேர்வு செய்வதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அவர்களுடைய வட்டி விகிதம். வங்கிகளுடன் ஒப்பிடும்போது NBFCகள் அதிக வட்டி விகிதங்களை வசூல் செய்கின்றன. வழக்கமாக கடன் பெறுபவரின் கடன் வரலாறு, வருமானம், கடன் தொகை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு 10% முதல் 45 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வசூல் செய்யப்படுகிறது. கடன் வாங்குவதற்கு முன்பு எப்போதும் மறைமுக கட்டணங்கள், ப்ராசஸிங் கட்டணங்கள் அல்லது ப்ரீ-பேமெண்ட் அபராதங்கள் போன்றவற்றை சரிபார்ப்பது அவசியம்.
NBFC கடன்கள் வாங்குவது பாதுகாப்பானதா?
*முதலில் நீங்கள் கடன் வாங்கும் NBFC ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை RBIன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்குச் சென்று நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
*நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள NBFC அல்லது கடன் அப்ளிகேஷன் சம்பந்தப்பட்ட ரிவ்யூக்கள் மற்றும் நற்சான்றிதழ்களை ஒரு முறை படித்துப் பார்க்கவும்.
*அளவுக்கு அதிகமான வட்டி விகிதங்கள் அல்லது கடனைத் திருப்பிப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் வன்முறை நிறைந்த யுக்திகள் போன்றவற்றில் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
*கடன் வழங்குவதற்கு முன்பு கட்டணங்கள் செலுத்தச் சொல்லும் நிறுவனங்கள் அல்லது அப்ளிகேஷன்கள் மற்றும் உங்களுடைய மொபைல் சாதனத்தின் அனுமதியைக் கேட்கும் அப்ளிகேஷன்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
NBFC கடன் யாருக்கானது?
*வங்கி நிர்ணயித்துள்ள கடன் பெறும் தகுதி வரம்பைப் பூர்த்தி செய்ய இயலாத மாத வருமானம் அல்லது சுய தொழில் செய்பவர்கள்
*அதிக ஆவணச் செயல்முறையில் ஈடுபட முடியாமல், உடனடி பணத் தேவைகள் இருப்பவர்கள்
*குறுகிய கால பர்சனல் லோன்கள் அல்லது பிசினஸ் லோன்கள்
*வழக்கமான வங்கிகள் அமையப் பெற்றிருக்காத இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களில் வசிப்பவர்கள்.
NBFC லோன் அப்ளிகேஷன்கள் தற்போது அதிக அளவில் அதிகரித்து வந்தாலும், உங்களுடைய பாதுகாப்புக்கு நீங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட NBFCகளிடமிருந்து கடனை வாங்குங்கள். ஒட்டுமொத்தமாக NBFC லோன் என்பது உடனடி கடன்கள் தேவைப்படும் நபர்கள் அல்லது வங்கிகளுக்கான அணுகல் இல்லாத நபர்களுக்கான சௌகரியமான ஒரு பொருளாதாரக் கருவியாக அமைகிறது. எனினும் எந்த ஒரு பொருளாதார ப்ராடக்ட் போலவே NBFC கடனையும் எச்சரிக்கையுடன் கையாளுவது அவசியம்.
June 18, 2025 4:31 PM IST

