இந்த ‘நம்ம ரன் – கோயம்பத்தூர்’ நிகழ்ச்சியானது உடற்தகுதி, ஒற்றுமை மற்றும் சமூக உணர்வைக் கொண்டாடும் நிகழ்வாக அமையவுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து வயதினரும் இதில் பங்கேற்கலாம். ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் நீங்களும் கோயம்பத்தூரில் இணைந்து, இந்த ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்திற்கு ஆதரவளித்து, உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடற்பயிற்சியை மாற்றலாம்!
இப்போட்டி எப்போது, எங்கே நடைபெறுகிறது?
தேதி: நவம்பர் 22, 2026
நேரம்: காலை 5:30 மணி முதல்
இடம்: கொடிசியா, கோயம்பத்தூர்
யாரெல்லாம் பங்கேற்கலாம்? என்னென்ன பிரிவுகளெல்லாம் இதில் உள்ளன?
பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் பங்கேற்க…:
- 3 கி.மீ. நடைப்பயணம் (3 KM Walkathon),
- 2,000 அடிகள் விருப்பமான ஆடையில் ரன்னிங் செல்வது (2K Freestyle Costume run),
- 5 மற்றும் 10 கி.மீ ஜாலியான ஓட்டம் (Fun Runs)
ஆகியவை இருக்கின்றன. இதிலேயே, போட்டி பிரிவில்…
- பெரியவர்களுக்கு 5 மற்றும் 10 கி.மீ. நேரப்படுத்தப்பட்ட ஓட்டங்கள் (5 & 10 KM Timed Runs)
- குழந்தைகள் 1 & 2 கி.மீ ஜாலியான ஓட்டம் (1 & 2 KM Fun Run) இருக்கின்றன.
இப்படியாக அனைத்து வயதினரும் தங்களது வயது மற்றும் உடற்தகுதிக்கு ஏற்ற வகையில் பங்கேற்க பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பரிசுத் தொகை!
இந்த நிகழ்ச்சியின் போட்டிப் பிரிவுகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 3 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1 கி.மீ., 2 கி.மீ. மற்றும் 3 கி.மீ. பிரிவுகளில் பங்கேற்பவர்களுக்கு ரொக்கப் பரிசு கிடையாது.
இதில் பதிவு செய்து ஓடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…
நிகழ்ச்சியில் பங்கேற்கப் பதிவு செய்பவர்களுக்கு பிராண்டட் டி-ஷர்ட், நிறைவுப் பதக்கம், பந்தய எண் அட்டை, மின்னணுச் சான்றிதழ், பரிசுகள் மற்றும் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், ஓட்ட நிகழ்ச்சியின்போது தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்கள், புத்துணர்வு பானங்கள் ஆகியவை வழங்கப்படும். இவையன்றி நிகழ்விடத்தில் ஸும்பா நடனப் பயிற்சி, உடற்பயிற்சி விழா, விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், லைவ் மியூசிக் இருக்குமென்பதால், அவற்றையும் நீங்கள் இலவசமாக பெறலாம். இவற்றுடன், தொழில்முறை புகைப்படக்கலைஞர்களும் நிகழ்ச்சியில் இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.
பங்கேற்பாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகள்:
ஓட்டப் பாதையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் வசதிகள் வழங்கப்படும். மருத்துவக் குழுவினர், அவசர மருத்துவ உதவி, இதய அவசரநிலைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதி, தன்னார்வலர்கள் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி விவரப் பக்கம் தெரிவிக்கிறது.
குழந்தைகள், இளைஞர்கள், பெற்றோர் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஒன்றாகப் பங்கேற்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் ‘நம்ம ரன் கோயம்பத்தூர் 2026’ நிகழ்ச்சி அமையவுள்ளது.
பதிவுக் கட்டணம்:
1 கி.மீ. குழந்தைகள் ஓட்டம் – ரூ. 99
2 கி.மீ. குழந்தைகள் ஓட்டம் – ரூ. 99
2 கி.மீ. ஆடை அலங்கார ஓட்டம் – ரூ. 99
3 கி.மீ. நடைப்பயணம் – ரூ. 499
5 கி.மீ. வேடிக்கை ஓட்டம் – ரூ. 499
5 கி.மீ. நேரக் கணக்கீட்டு ஓட்டம் – ரூ. 599
10 கி.மீ. நேரக் கணக்கீட்டு ஓட்டம் – ரூ. 699
10 கி.மீ. வேடிக்கை ஓட்டம் – ரூ. 899
நெட்வொர்க்18 –ன் ‘நம்ம ரன் 2026’ (Network18 – Namma Run 2026) நிகழ்வில் நீங்களும் ஒருவராகப் பங்கேற்று பயன்பெறுங்கள். அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்!

