• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Mystery Egg: 30 வருடங்களுக்கு ஒருமுறை ‘முட்டையிடும்’ மர்ம மலை… சீனாவின் இந்த அதிசயத்தின் பின்னணி என்ன?

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Mystery Egg: 30 வருடங்களுக்கு ஒருமுறை ‘முட்டையிடும்’ மர்ம மலை… சீனாவின் இந்த அதிசயத்தின் பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை விரிவாகக் காண்போம்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள “சான் டா யா’ (Chan Da Ya) என்று அழைக்கப்படும் மலைப்பாறை, எரிமலை போலவோ அல்லது வேறு எந்த இயற்கைச் சீற்றங்கள் போலவோ இல்லாமல், அமைதியான அதிசயத்தை நிகழ்த்துகிறது.

The mountain that lays “eggs” every 30 years

The mountain that lays “eggs” every 30 years

அறிவியல் என்ன சொல்கிறது?

புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைப்பாறையை ஆய்வு செய்தபோது, சில தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த மலைப்பாறை இரண்டு விதமான பாறைகளால் ஆனதாக அறியப்பட்டுள்ளது.

மென்மையான சுண்ணம்புப் பாறை மற்றும் கடினமான பாறை அடுக்குகள் கலந்து இங்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக காற்று மற்றும் மழையால் மென்மையான பாறை அடுக்குகள் அரிக்கப்படுவதாகவும், ஆனால் அதனுள் இருக்கும் கடினமான முட்டை வடிவிலான பாறைகள் அரிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

மென்மையான பாறை அடுக்குகள் முழுமையாக அரிக்கப்பட்ட பிறகு உள்ளே இருக்கும் கடினமான முட்டைக் கற்கள் மெதுவாக வெளிப்பட்டு இறுதியில் பாறையிலிருந்து பிரிந்து கீழே விழுகின்றன.

ஒரு கல் முழுமையாக வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கற்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் காலத்தில் உருவானவை என சில புவியியலாளர்கள் கருதுகின்றனர்.​

Read More

Previous Post

ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு திட்டம் வழங்கும் அசத்தல் திட்டம்.. EPF மெம்பர்களுக்கு சூப்பர் ஆஃபர்! | வணிகம்

Next Post

வெற்றிகரமாக 222.29 மில்லியன் ரிங்கிட் வைப்பு தொகையை சேகரித்துள்ளது பிஎம்எஸ் 2025  | Makkal Osai

Next Post
வெற்றிகரமாக 222.29 மில்லியன் ரிங்கிட் வைப்பு தொகையை சேகரித்துள்ளது பிஎம்எஸ் 2025  | Makkal Osai

வெற்றிகரமாக 222.29 மில்லியன் ரிங்கிட் வைப்பு தொகையை சேகரித்துள்ளது பிஎம்எஸ் 2025  | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin