• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Muskmelon Farming: தீவிரமான கிர்ணி பழ அறுவடை… சென்னை, புதுச்சேரிக்கு செல்லும் பழங்கள் | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Muskmelon Farming: தீவிரமான கிர்ணி பழ அறுவடை… சென்னை, புதுச்சேரிக்கு செல்லும் பழங்கள் | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 23, 2026 10:14 AM IST

கிர்ணி பழ சாகுபடியில் விளைச்சலைப் போலவே சந்தையில் கிடைக்கும் விலையும் விவசாயிகளின் வருமானத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

+

தீவிரமான

தீவிரமான கிர்ணி பழ அறுவடை

விழுப்புரம் மாவட்டத்தில் கிர்ணி பழ அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கிர்ணி பழங்கள் சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. மழை மற்றும் வெப்பமான காலநிலையை விரும்பும் கிர்ணி பழத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தின் மண் மற்றும் தட்பவெப்பநிலை ஓரளவுக்கு ஏற்றதாக இருப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் இப்பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், குறுகிய காலத்திலேயே அறுவடைக்கு வரும் பயிராக இருப்பதும் விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளது.

பொதுவாக நல்ல பருவநிலை நிலவும் காலங்களில், ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் கிர்ணி பழத்தில் சுமார் 12 முதல் 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் குறுகிய காலத்தில் கணிசமான வருமானம் ஈட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் பல விவசாயிகள் கிர்ணி பழ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக சில வயல்களில் கிர்ணி பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் விளைச்சல் சுமார் 9 டன் அளவுக்கு குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கிர்ணி பழ சாகுபடியில் அளவுக்கு அதிகமான ஈரப்பதம் மற்றும் தொடர்ச்சியான மழை பயிரின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.

குறிப்பாக அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் பழங்களின் தரம் மற்றும் சேமிப்பு காலம் பாதிக்கப்படுவதோடு, சந்தைக்கு கொண்டு செல்லும்போது பழங்கள் சேதமடையும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட பழங்களை விவசாயிகள் விரைவாக விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கிர்ணி பழங்களுக்கு உள்ளூர் சந்தைகளில் மட்டுமின்றி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிர்ணி பழ சாகுபடியில் விளைச்சலைப் போலவே சந்தையில் கிடைக்கும் விலையும் விவசாயிகளின் வருமானத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சாகுபடி செலவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நல்ல தரமான பழங்களுக்கு உரிய விலை கிடைத்தால் சாகுபடி செலவை ஈடுகட்டி லாபம் பெற முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான் | Pakistan Capital walledoff with 20,000 containers ahead of PTI party protest demanding release of Imran Khan

Next Post

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஒப்பந்தங்களில் ஏற்பாடுகளுண்டா?

Next Post
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஒப்பந்தங்களில் ஏற்பாடுகளுண்டா?

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஒப்பந்தங்களில் ஏற்பாடுகளுண்டா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin