சிங்கப்பூர்: ஆடவர் ஒருவர் MRT ரயிலில் தரையில் குப்புறக் கிடக்கும் காணொளி இணையத்தில் பரவிவரும் நிலையில் அது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்று பேஸ்புக்கில் ஜூலை 10 முதல் வைரலாகி வருகிறது.
வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா?
நம் தளத்திற்கு தனிப்பட்ட முறையில் இந்த காணொளி அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் எடுக்கப்பட்ட இந்த காணொளியில், ஆடவர் ஒருவர் காலியாக இருக்கும் இருக்கையிக்கு கீழே தரையில் படுத்திருப்பதைக் காணலாம்.
இந்த காணொளி டிக்டாக், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது, கீழே வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ: https://www.instagram.com/reel/DMNDp4CvUa3
நெட்டிசன்கள் கருத்து
அந்த ஃபேஸ்புக் காணொளி பதிவில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர், அதில் சிலர் ஆடவருக்கு அனுதாபம் தெரிவித்தனர்.
அதில் ஒருவர், “அவர் வேலைக்கு சென்றுவந்ததால் மிகவும் சோர்வாக இருக்கிறார், அவரை ஓய்வெடுக்க விடுங்கள்” என கருத்து தெரிவித்தார்.
மற்றொருவர், “அவர் அதிக வேலையினால் இவ்வாறு படுத்திருக்கவில்லை என்று நம்புகிறேன்” என பதிவிட்டார்.
ஒரு சிலர், “MRT ஊழியர்கள் இவரை ஏன் கவனிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.
“சிங்கப்பூர் ரயில்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதை இந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது” என்று சிலர் கேலி கிண்டல் செய்தனர்.
“எங்கள் (சிங்கப்பூர்) ரயில்கள் மிகவும் சுத்தமாக இருப்பதற்கு நீங்கள் தரையில் படுத்து தூங்குவதே ஓர் சான்றாகும்” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.
அது ஒருபுறம் இருக்கையில், இந்த காணொளியை அவரின் தாய், தந்தை, மனைவி அல்லது பிள்ளைகள் பார்த்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
வீழ்ந்து கிடப்பது அவர் மட்டுமல்ல, அவர் சார்ந்த நாட்டின் மானமும் தான் என்பதை நினைவில்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.