வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு ஜூலை மாதம், கரூர் மாவட்டம் வெளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் சோபனா ஆகியோருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஊட்டியில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பினாமி பெயரில் சொத்து வாங்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், வருமான வரித்துறை தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

