• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Mojtaba Khamenei | ஈரான் புதிய உச்சத் தலைவர்… யார் இந்த மோஜ்தபா… தேர்வானது எப்படி? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Mojtaba Khamenei | ஈரான் புதிய உச்சத் தலைவர்… யார் இந்த மோஜ்தபா… தேர்வானது எப்படி? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானில் வானளாவிய அதிகாரம் படைத்த அயதுல்லா அலி கமேனியை அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதல் மூலம் கொலை செய்தனர். போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை இடைக்கால உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி, உச்சபட்ச தலைவர் பதவி காலியானால், அடுத்த 50 நாட்களுக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, இடைக்கால தலைவர் நியமனத்தின் போதே, 88 ஷியா மதகுருமார்களைக் கொண்ட வல்லுநர் குழு, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியிலும் இறங்கியது.

இந்தக் குழுவில் உள்ள 88 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பெறுபவர் அடுத்த உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்பது விதியாகும்.

இந்நிலையில், உயிரிழந்த கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபாவை ஈரானின் உச்சபட்ச தலைவராக வல்லுநர் குழு தேர்வு செய்துள்ளது.

1969-ஆம் ஆண்டு ஈரானின் மாஷட் நகரில் பிறந்த மோஜ்தபா, இஸ்லாமிய தத்துவப் படிப்பு படித்தவர். சிறு வயது முதலே தந்தைக்கு மிக நெருக்கமாக இருந்து வந்த மோஜ்தபா, ஷியா மத குருவாகவும் செயல்பட்டு வந்தார்.

ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது இளைஞராக இருந்த மோஜ்தபா, ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெற்றார். அதன் மூலம், ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் முக்கிய புள்ளியாக மோஜ்தபா மாறினார்.

மேலும், அந்நாட்டு அரசியலிலும் திரைமறைவில் மோஜ்தபா ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

56 வயதான மோஜ்தபா, ராணுவத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததே அடுத்த தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், மோஜ்தபாவை புதிய தலைவராக தேர்வு செய்ய வல்லுநர் குழுவிற்கு புரட்சிகர பாதுகாப்பு படை அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், முடியரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஈரான் குடியரசு நாட்டில் தந்தைக்குப் பிறகு உச்ச தலைவர் பதவியை மகன் ஏற்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில், கமேனியுடன் மோஜ்தபாவின் மனைவியும், அந்நாட்டின் பழமைவாத கொள்கை கொண்ட மூத்த அரசியல்வாதியின் மகளுமான ஜஹ்ராவும் கொலை செய்யப்பட்டார்.

மோஜ்தபாவிற்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், அவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் அரசியலில் முக்கிய பங்காற்றி வந்த மோஜ்தபா, தற்போது நேரடியாக அதிகாரப் பொறுப்பை ஏற்று ஈரானை வழிநடத்த உள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் புதிய தலைவர் மோஜ்தபாவின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read More

Previous Post

போக்குவரத்து கேமரா ஊடுருவல் மூலம் கமேனியின் இருப்பிடத்தை கண்டறிந்த இஸ்ரேல்? உளவு தகவல்கள் வெளியான பின்னணி! – Sri Lanka Tamil News

Next Post

“பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா அன்வாருக்கு 10 ஆண்டுகள் பதவியில் இருக்க வழிவகை செய்யும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தவறாக நினைத்துவிட்டனர் – பஹ்மி” – Malaysiakini

Next Post

“பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா அன்வாருக்கு 10 ஆண்டுகள் பதவியில் இருக்க வழிவகை செய்யும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தவறாக நினைத்துவிட்டனர் – பஹ்மி” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin