இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கான இராணுவ விற்பனையை பல பில்லியன் டாலர்களாக அதிகரிப்போம். F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான வழியையும் வகுத்து வருகிறோம். இரு நாடுகளும் இனி வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்து செயல்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கவனம் செலுத்துவோம். பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் வரும்” எனக் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்புக்கு முன்பே, இந்தியா இறக்குமதிப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தியப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். எனவே, பிரதமர் மோடி அரசு, அமெரிக்கா செல்வதற்கு முன்பே, உயர் ரக மோட்டார் சைக்கிள்களுக்கான வரிகளைக் குறைத்திருந்தது. இது இந்தியாவில் அமெரிக்க உற்பத்தி நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் போன்ற நிறுவனங்களுக்கு ஓர் ஊக்கமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.