Last Updated:
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை கடந்ததற்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வரலாற்றில் அரசில் நீண்ட காலமாக தலைமைப் பதவியை வகித்தவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, சிக்கிம் முதலமைச்சராக இருந்த பவன் குமார் சம்லிங்கின் 8 ஆயிரத்து 930 நாட்கள் என்ற சாதனையை பிரதமர் மோடி கடந்திருப்பது தேசத்திற்கு பெருமிதம் தரும் தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தின் முதலமைச்சராக மக்கள் சேவையைத் தொடங்கியது முதல் பிரதமராக நாட்டை சிறப்பிடத்துக்கு இட்டுச் சென்றது வரை, அவரது பயணம் உத்வேகமிக்கது என புகழாரம் சூட்டியுள்ளார். 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து 14 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த நிலையில் 2014ம் ஆண்டில் பிரதமரானார். அது முதல் தொடர்நது 3 ஆவது முறையாக பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து ஏராளமானோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை கடந்ததற்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும், 24 ஆண்டுகள் 165 நாட்கள் என்ற சாதனையைக் கடந்ததற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


