Last Updated:
“நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்-இன் அலைபேசி வாயிலாக உரையாற்றிய அதிபர் டொனால்டு டிரம்ப், தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் பேசினார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்கா பல்வேறு துறைகளில் பல விழுமியங்களையும் பொதுவான நலன்களையும் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு என்றார்.


