“நான் 2014 மற்றும் 2019 க்கு இடையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தேன், மேலும் நீட் தேர்வுக்கு பரந்த ஆதரவை வழங்கியதை நினைவு கூர்கிறேன். ஆனால், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள், நீட் தேர்வானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சலுகை அளிக்கும் என்றும், சிபிஎஸ்இ அல்லாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாதகமானதாக இருக்கும் என்றும் கவலை தெரிவித்திருந்தனர்,” என்று கூறிய ஜெய்ராம் ரமேஷ், “இந்த சிபிஎஸ்இ பிரச்சினைக்கு சரியான பகுப்பாய்வு தேவை என்று நான் இப்போது நினைக்கிறேன். NEET பாரபட்சமா? ஏழைப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களும் நீட் மீது ஆழ்ந்த சந்தேகங்களை வெளிப்படுத்தி உள்ளன என கூறி உள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)