Last Updated:
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் உள்ள 18 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானில் பல்வேறு தளங்களை குறிவைத்து 2ஆவது நாளாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா வீடியோ வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கமெண்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள், கண்காணிப்பு மையங்கள், தகவல் பரிமாற்று மையங்கள், விமானப்படை மையங்களை குறிவைத்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு கடற்படை, விமானப்படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காப்புக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் உள்ள 18 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி எந்த விதத்திலும் அனுமதி இல்லை என ஈரான் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.47 சதவீதம் உயர்ந்து 95.40 டாலராக உள்ளது.


