Last Updated:
Microsoft Gaming தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
Microsoft Gaming தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்நிலையில் தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட், நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவான Microsoft Gamingக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மா தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான இவர், மைக்ரோசாப்ட்டில் செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைவராக பணிபுரிந்து வந்தார். அதேபோல மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரிவுகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப துறையில் அனுபவம் பெற்றுள்ள ஆஷா சர்மாவின் திறமை, கேமிங் துறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆஷா சர்மாவை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கேமிங் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு ஆஷாவின் அனுபவம் பெரிதும் உதவும் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.


