அவ்வளவுதான், அதன் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக தல தோனி வான்கடே மைதானமே அதிரும் விதமாக பலத்த ஆராவாரத்துடன் பேட் செய்ய வந்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி நான்கு பந்துகளை எதிர்கொண்ட தோனி, ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார். மூன்று சிக்ஸர்களும் இமாலய சிக்ஸர்களாக இருந்த நிலையில் 4 பந்தில் 500 ஸ்டிரைக் ரேட்டுடன் 20 ரன்கள் அடித்து சிறந்த பினிஷர் என காட்டிவிட்டு சென்றார். தோனியின் ஒவ்வொரு அடிக்கும் இடிபோல் சத்தமும், ஆராவாரமும் எழுந்தன.

