Last Updated:
MI குடும்பத்திற்கு என்ன ஒரு பெருமை மற்றும் வரலாற்று தருணம்! மும்பை முதல் நியூயார்க் வரை, UAE முதல் கேப் டவுன் வரை – MI அணிகள் லீக் பட்டங்களையும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA டி20 கிரிக்கெட் தொடரில் MI கேப்டவுன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையொட்டி அந்த அணிக்கு நீடா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதைப் போன்று தென்னாப்பிரிக்காவில் எஸ்.ஏ. டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தொடரின் 3 ஆவது சீசனில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.
இதில் இறுதிப் போட்டிக்கு எம்.ஐ. கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தகுதி பெற்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியால் 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணி கோப்பையை வெல்வது என்பது 2ஆவது முறையாகும்.
கோப்பையை வென்றுள்ள எம்.ஐ. கேப்டவுன் அணிக்கு அதன் உரிமையாளர்களான நீடா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நீடா அம்பானி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது-
“MI குடும்பத்திற்கு என்ன ஒரு பெருமை மற்றும் வரலாற்று தருணம்! மும்பை முதல் நியூயார்க் வரை, UAE முதல் கேப் டவுன் வரை – MI அணிகள் லீக் பட்டங்களையும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளன. நாங்கள் உண்மையிலேயே உலகளாவிய குடும்பம், விளையாட்டின் மீதான எங்கள் ஆர்வத்தால் ஒன்றுபட்டுள்ளோம். எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தங்களின் தளராத ஆதரவிற்காக மனமார்ந்த நன்றிகள் – இந்த வெற்றி எங்களுடையது போலவே உங்களுடையது. 2025 ஆம் ஆண்டை நினைவுகூரத்தக்க ஆண்டாக மாற்றியதற்காக எம்ஐ கேப் டவுனுக்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க – 487 நாட்களுக்குப் பின்னர் சதம் அடித்த ரோகித் சர்மா.. ரசிகர்கள் உற்சாகம்..
இதேபோன்று ஆகாஷ் அம்பானி தனது வாழ்த்து பதிவில், மிகவும் அற்புதமான ஆட்டத்தை எம்ஐ கேப்டவுன் வெளிப்படுத்தியது. எங்களது அணியை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். திறமையாளர்களுக்கு எம்ஐ தொடர்ந்து வாய்ப்பும் ஆதரவும் அளித்து வருகிறது. அவர்களின் திறமையில் நம்பிக்கை வைத்து செயலாற்றும் எம்ஐ அணியின் செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இந்த வெற்றி எங்களுக்கானது மட்டுமல்ல. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிர்களுக்கானதும் கூட. இந்த தருணத்தை எல்லோரும் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
February 10, 2025 4:29 PM IST


