இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
அருண் கோயல் பதவி விலகியதன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
2027ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
அவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் மூவரில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.
கோயல் ஓய்வுபெற்ற பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி. அவர் நவம்பர் 2022 இல் தேர்தல் ஆணையராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.