மேலும் அந்தக் காணொளியில், இத்தாலி பிரதமர் மெலோனி, “பிரதமர் மோடி எங்களுக்கு ஒரு பரிசைக் கொண்டு வந்துள்ளார். அது மிக மிக சுவையான ஒரு டாஃபி” என்று கூற, பிரதமர் மோடி “மெலோடி” என்று பதிலளித்துள்ளார். இரு தலைவர்களும் அந்த டாஃபி பாக்கெட்டைக் காட்டி, அன்புடன் சிரித்து மகிழ்ந்தனர். இதைக்கண்ட சமூக ஊடகப் பயனர்கள் பலரும் #Melodi என்ற ஹேஷ்டேக்-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த மெலோடி என்ற பெயருக்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உண்டு. அதை உணர்த்தும் வகையிலேயே, மோடி இந்தப் பரிசை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.


