• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

MBA வேண்டாம்! பிசினஸ் தான் வேணும்! ரூ.5000 முதலீட்டில் தொழில் தொடங்கி ரூ.2 கோடி வருமானம் ஈட்டும் பெண்! | She Rejected an IIM MBA for Baking: How a Rs 5,000 investment Won Rs 1 Crore

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
MBA வேண்டாம்! பிசினஸ் தான் வேணும்! ரூ.5000 முதலீட்டில் தொழில் தொடங்கி ரூ.2 கோடி வருமானம் ஈட்டும் பெண்! | She Rejected an IIM MBA for Baking: How a Rs 5,000 investment Won Rs 1 Crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


MBA வேண்டாம்! பிசினஸ் தான் வேணும்! ரூ.5000 முதலீட்டில் தொழில் தொடங்கி ரூ.2 கோடி வருமானம் ஈட்டும் பெண்!

பல மாணவர்களுக்கு IIM போன்ற கல்லூரியில் MBA படிக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததும்.. அதை உதறித் தள்ளிவிட்டு தன்னுடைய பேஷனை நோக்கி பயணித்திருக்கிறார் கோழிக்கோடைச் சேர்ந்த மேகா சரயன். அவர் எடுத்த இந்த முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா? வெறும் ரூ.5000 முதலீட்டில் அவர் தொடங்கிய பேக்கரி பிசினஸ் தான்.

படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட பிசினஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க மேகா விருப்பப்பட்டார். அவருடைய இந்த முடிவு தான் இன்று மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. மேகா கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் எக்கனாமிக்ஸ் பட்டம் பெற்றவர்.

MBA வேண்டாம்! பிசினஸ் தான் வேணும்! ரூ.5000 முதலீட்டில் தொழில் தொடங்கி ரூ.2 கோடி வருமானம் ஈட்டும் பெண்!

கல்லூரியில் படிக்கும் போது பேக்கிங் செய்வதில் அவ்வளவாக அவருக்கு விருப்பமில்லை. ஆனால் அங்கு படித்த சீனியர் மாணவர் ஒருவர் பேக்கிங் ஒர்க்ஷாப் நடத்தியுள்ளார். அதிலிருந்து தான் மேகாவுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக கேக் செய்ய தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல மேகாவின் நண்பர் ஒருவர் அவற்றை வெளியில் விற்பனை செய்ய யோசனை தந்துள்ளார்.

கொல்கத்தாவில் சோமேட்டோ அப்போது பிரபலமடையத் தொடங்கியது. இதையடுத்து மேகாவும் தன்னுடைய பேக்கிங் பிசினஸை சோமேட்டோவில் பதிவு செய்தார். அப்போது வெறும் சாக்லேட் ட்ரஃபிள் கேக் மட்டும்தான் அவருடைய மெனுவில் இருந்தது. ஆனால் இந்த ஒரு கேக்கை விற்பனை செய்தே முதல் மாதம் ரூ.3000 வருமானம் பெற்றார்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தன்னுடைய சொந்த சேமிப்பில் ரூ.5000 முதலீடு செய்து ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தார். “லேண்ட் ஆப் கேக்ஸ்” என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்தார். ஆனால் 2019-ஆம் ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் அவருடைய வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர் நியமித்த ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.

ஆனால் அந்த சமயத்தில் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்தது. தனது தந்தை மற்றும் சகோதரரின் உதவியுடன் எல்லா வேலைகளையும் தாமே செய்தார். ஆனால் அப்போதும் நாளொன்றுக்கு 25 முதல் 45 கேக்குகள் வரை தயாரித்து விற்பனை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எம்பிஏ படிப்பைத் தொடர்வதா? பேக்கிங் தொழிலைத் தொடர்வதா என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஆனால் அப்போதும் மேகா பேக்கிங்கை தான் தேர்வு செய்தார். மேகா சாதாரணமாக பேக்கிங் தொழிலை தொடரவில்லை. இதற்காக முறையான பயிற்சி பெற்று சிட்டி & கில்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து பேஸ்ட்ரி செஃப் சான்றிதழ் பெற்றுள்ளார்.

மேலும் 500க்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்டுக்கு சென்று விலை நிர்ணயம், வாடிக்கையாளரின் விருப்பங்கள், சுவை போன்ற முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்துள்ளார், நாட்கள் செல்ல செல்ல இவருடைய லேண்ட் ஆப் கேக்ஸ் நிறுவனம்.. கிளவுட் கிச்சன் மற்றும் கபே என விரிவடைந்தது. பின்னர் மோஜ் என்ற பெயரில்… பெரிய டெசர்ட் பிராண்டாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் சீஸ் கேக், பிரவுனி, குளிர்பானங்கள் என ஏராளமான உணவுப் பொருட்கள் விற்பனை ஆகிறது.

மேகா ஷார்க் டேங்க் சீசன் 5 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நடுவர்கள் இருப்பார்கள். அதில் நம்முடைய பிசினஸ் ஐடியாவை அவர்களுக்கு தெரிவிக்கலாம். பங்கேற்பவர்கள் சொல்லும் ஐடியா நடுவர்களுக்கு பிடித்திருந்தால் முதலீடு செய்வார்கள். அப்படி தான் மேகா அனுபம் மிட்டல் என்ற நடுவரிடம் இருந்து 1 கோடி நிதி திரட்டியுள்ளார். 2024-ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 2 கோடி வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Story first published: Saturday, October 24, 2026, 17:53 [IST]

Other articles published on Oct 24, 2026

Read More

Previous Post

மெக்கா, மதீனாவில் விழுந்த ஏவுகணை சிதைவுகள்.. ஹவுதிக்கள் கடும் தாக்குதல்! சவுதியில் எகிறும் டென்ஷன் | Houthis launch big strike on Saudi Missile shrapnel falls in Mecca, Medina

Next Post

காலை இழந்த முன்னாள் கோப்ரா கமாண்டோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை!… | Makkal Osai

Next Post
காலை இழந்த முன்னாள் கோப்ரா கமாண்டோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை!… | Makkal Osai

காலை இழந்த முன்னாள் கோப்ரா கமாண்டோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை!... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin