மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தில் முக்கியமான மார்க்கெட்டாக உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கிருந்து காய்கறி தென் மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதினால் முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது.
முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் வரைக்கும் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.50 ஆக இருந்தது. தற்பொழுது மழையின் காரணமாக படிப்படியாக உயர்ந்து முருங்கைக்காய் விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: Madurai Meenakshi Amman: மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க போறீங்களா… அப்போ இந்த தகவலை தெரிஞ்சுக்கோங்க…
திருவிழா மற்றும் சுப நாட்களில் முருங்கைக்காய் தேவை அதிகமாக உள்ள நிலையில் முருங்கையின் விலை தற்பொழுது உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மழை நிலவரத்தைப் பொறுத்து முருங்கைக்காய் விலையில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
