Last Updated:
இந்திய அணியில் அம்பதி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான், இர்பான் பதான் உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்ற நிலையில் இன்று இறுதிப் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய ஆட்டக்காரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் அம்பதி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான், இர்பான் பதான் உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முன்னேறின.
இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணி அளவில் ராய்ப்பூர் வீர நாராயணன் சிங் சர்வதேச மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதால் இந்த இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணிக்கு கேப்டனாக பிரைன் லாரா செயல்படுகிறார். அந்த அணியில் ஜெரோம் டைலர், ரவி ராம்பால், ட்வேன் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உள்ளனர்.
March 16, 2025 5:42 PM IST


