அதுக்கப்புறம்தான், அரசுக் கல்லூரியில இருந்து சீட் கிடைச்ச தகவல் தெரிஞ்சது. அப்போ, என்னைச் சரியா கைடு பண்றதுக்கு ஆள் இல்ல. அதனால, எம்.ஜி.ஆர் ஜானகி காலேஜிலேயே பி.காம் படிச்சேன். ஃபீஸ் 50,000 ரூபாய் கட்டவேண்டியிருந்தது.
அப்பாவும் அம்மாவும் 10 பைசாவுக்கு வட்டிக்கு வாங்கித்தான் கொடுத்தாங்க. ஒரு செமஸ்டர்தான் எழுதினேன். தொடர்ந்து ஃபீஸ் கட்ட காசு இல்லாததால நின்னுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். மெடிக்கல் ஷாப், சூப்பர் மார்க்கெட்ன்னு நிறைய இடத்துக்கு வேலைக்குப்போயி நான்தான் அந்த 50,000 ரூபாய் கடனை வட்டியோடு அடைச்சேன். பி.காம், எம்.காம்-ன்னு டபுள் டிகிரி முடிச்சுட்டு வங்கி வேலைக்குப் போகணும்ங்கிறதுதான் ஆசை. ஆனா, முதலாமாண்டுடனே என் கனவு சிதைஞ்சிடுச்சு.
இப்போதும் அம்மாவோட ஹாஸ்பிட்டல் செலவுக்கு மாச மாசம் ஆயிரக்கணக்குல செலவாகுது. அப்பாவுக்கு சுகர் இருக்கு. அவரும் பீச்லதான் சின்னதா கடை வெச்சிருக்கார். நான் கடந்த ஜனவரி மாசம் இந்த மசாலா பொரிக் கடையை ஓபன் பண்ணினேன். அப்போதான், அமெரிக்கா அண்ணன் என் கடைக்கு வந்தாரு. ரொம்ப கேஷுவலா அன்பா பேசினார்.

