2009-ல் லண்டனில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், “இந்தியாவின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் மன்மோகன் சிங்கே காரணம். இந்த உச்சி மாநாடு முடியும் நேரத்தில், அவரை நான் நண்பர் என்று அழைக்க முடியும் என நம்புகிறேன்.” என்றார். அதைத்தொடர்ந்து, 2010-ல் டொராண்டோவில் (கனடா) நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய ஒபாமா, “பிரதமர் பேசும்போது மக்கள் அனைவரும் கவனிப்பார்கள் என்று என்னால் இங்கு கூற முடியும்.” என்று மன்மோகன் சிங்கைப் புகழ்ந்தார்.

மேலும், டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், “நீங்கள், ஏஞ்சலா மெர்கல் (ஜெர்மனி) அல்லது பிரதமர் மன்மோகன் சிங் அல்லது அதிபர் லீ (தென் கொரியா) அல்லது பிரதமர் எர்டோகன் (துருக்கி) அல்லது டேவிட் கேமரூன் (இங்கிலாந்து) ஆகியோரிடம் கேட்டால், அதிபர் ஒபாமா மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த நட்பும், பிணைப்பும்தான் நாடுகளுக்கிடையிலான உறவைத் திறம்பட செயல்படுத்த முடிந்தது.” என்று ஒபாமா கூறியிருந்தார்.

