மதுரையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிகவும் முக்கியமான மார்க்கெட்டாக இருக்கக்கூடியது மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட். இங்குள்ள மொத்தம் மற்றும் சில்லறை கடைகளில் இருந்து தான் மதுரையை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோல் இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும் வெளி மாவட்டங்களான கர்நாடகா ஆந்திரா, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு வந்து விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் உசிலம்பட்டி சத்திரப்பட்டி கொட்டாம்பட்டி போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டு மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனை அடுத்து காய்கறிகளின் விலை நிலவரத்தை பொருத்தவரையிலும், பீன்ஸின் விலை 30லிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 60 ரூபாயாகவும், அவரையின் விலை 55 ரூபாயாகவும், பீட்ரூட் 50 ரூபாயாகவும், காலிபிளவர் 35 ரூபாயாகவும், முட்டைகோஸ் 30 ரூபாயாகவும், பச்சை மிளகாய் 30 ரூபாய் ஆகவும், கத்திரிக்காய் ரூ. 30 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கேரட் ரூ.20லிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 70ல் இருந்து 80 ரூபாயாகவும், சவ் சவ் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், முருங்கைக்காய் 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் ஆகவும், வெண்டைக்காய் 30 ரூபாயாகவும், தக்காளி 15 ரூபாய் ஆகவும், ரூபாயாகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…