கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல், எரிபொருள் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகமும் சற்று குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. அதேபோல், எரிவாயு இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாகப் பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதன் விளைவாக, வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் திடீரென உயர்ந்துள்ளது. மேலும், சில எரிவாயு முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருந்தால், குறிப்பிட்ட உதவி எண் வாயிலாக நீங்கள் புகார் அளிக்கலாம்.


