இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வணிக சிலிண்டர் சப்ளையில் உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலை உணவகங்கள், தொழில் நிறுவன கேண்டீன்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


