• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

LPG Cylinder Shortage Leaves Vegetables Unsold in Namakkal Wholesale Market | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
LPG Cylinder Shortage Leaves Vegetables Unsold in Namakkal Wholesale Market | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 12, 2026 5:47 PM IST

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் வாங்குவதை குறைத்துள்ளனர்

+

சிலிண்டர்

சிலிண்டர் தட்டுப்பாட்டால் தேங்கி கிடக்கும் காய்கறிகள்

நாமக்கல் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக ஹோட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் வாங்குவதை குறைத்ததால், மொத்த சந்தைகளில் காய்கறிகள் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த காய்கறி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் உருவாகியுள்ள அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையிலான பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக நாமக்கல் பகுதியில் வணிக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும் தினசரி மொத்த காய்கறி சந்தையில் விற்பனை கடுமையாக குறைந்துள்ளது. வழக்கமாக ஹோட்டல் உரிமையாளர்கள் அதிக அளவில் வாங்கும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பூசணிக்காய், முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் தற்போது வாங்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன. சில இடங்களில் காய்கறிகள் வெயிலில் காய்ந்து கெட்டுப்போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தினசரி சந்தை மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், “சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் வாங்குவதை குறைத்துள்ளனர். முன்பு மூட்டைக்கணக்கில் வெங்காயம், உருளைக்கிழங்கு வாங்குவார்கள். தற்போது யாரும் வாங்காததால் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன. வாங்குபவர்கள் இல்லையெனில் காய்கறிகளை கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக விற்பனை குறைந்ததால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், காய்கறி வியாபாரிகள் மற்றும் ஹோட்டல் தொழிலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து.. 20 அடி உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்பால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்”- ஹர்தீப் சிங் புரி | Hardeep Singh Puri about modi in Parliament

Next Post
“சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்”- ஹர்தீப் சிங் புரி | Hardeep Singh Puri about modi in Parliament

"சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்"- ஹர்தீப் சிங் புரி | Hardeep Singh Puri about modi in Parliament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin