Last Updated:
பயப்பட வேண்டாம் என மக்களுக்கு கூறிவிட்டு வேறு சில காரணங்களுக்காக பிரதமர் மோடி அச்சப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் சிலிண்டர் விநியோகம் நடப்பதாகவும் மத்திய அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பயப்பட வேண்டாம் என மக்களுக்கு கூறிவிட்டு வேறு சில காரணங்களுக்காக பிரதமர் மோடி அச்சப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் சிலிண்டர் தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்தார். நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொடுத்த விளக்கத்தில், “பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை. பெட்ரோல், டீசல், எரிபொருள் எண்ணெய் கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு 55% ஆக இருந்த ஹார்முஸ் அல்லாத கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது தோராயமாக 70% ஆக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.


