மத்திய கிழக்கில் நடந்து வரும் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் 60 சதவீத சமையல் கேஸ் தடைபட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கி வரும் மத்திய அரசு, ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வழங்கும் சிலிண்டர்களை ரத்து செய்தது. இதையடுத்து, 20 சதவீதம் விநியோகம் வழங்கப்பட்டது.


