உங்களுக்கு மானியம் வரவில்லை என்றால், www.mylpg.in என்ற இணையதளம் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம். அதற்கு முதலில், இந்த தளத்திற்குச் சென்று நீங்கள் பயன்படுத்தும் எரிவாயு நிறுவனத்தின் (எடுத்துக்காட்டாக, இந்தியன் ஆயில், பாரத் கேஸ் அல்லது ஹெச்பி கேஸ்) லோகோவைக் கிளிக் செய்யவும். அதில், “கருத்து தெரிவிக்கவும்” அல்லது “புகாரைப் பதிவு செய்யவும்” என்ற விருப்பம் தெரியும்.


