இங்கு இளம் ஆண்கள் பலரும் திருமணம் செய்துகொள்வதற்கும், காதலிப்பதற்கும் பெண்கள் கிடைக்காமல் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், முதியவர் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் லீ. இவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், அங்கு 23 வயதான சியாஃபங் (Xiaofang) பணிபுரிந்து வந்துள்ளார்.
முதலில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து காதலாக மலர்ந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அப்பெண் தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரை கைவிட்டு காதலனின் கரம் பிடித்துள்ளார்.
முதியவரின் முதிர்ச்சி, ஞானம் ஆகியவற்றால் அந்தப் பெண் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் இளமை மற்றும் கருணையின் காரணமாக முதியவர் இளம் பெண்ணை காதலித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

