அம்மா உணவகம் – பாஜக தேர்தல் அறிக்கை
சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம் என பாஜக தேர்தல் வாக்குறுதி. தமிழ்நாட்டில் உள்ளதை போன்று மலிவு விலையில் உணவு வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. அம்மா உணவகம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்றும் ஐந்து ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் சாப்பாடு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறிதி அளித்துள்ளது.
சென்னையில் தபால் வாக்குகள் செலுத்தி வரும் காவலர்கள்
சென்னையில் மக்களவை தேர்தல் அன்று தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அடையாறு, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை தேர்தல் அலுவலங்கங்களில் இன்று முதல் ஏப்ரல் 13 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம்.
காரைக்குடியில் அமித் ஷாவின் வாகன பேரணி ரத்து
மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வரும் நிலையில் காரைக்குடியில் அவர் பங்கேற்க இருந்த வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்ட நிலையில் திருமயத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் அமித் ஷா.
- First Published :