லேக்வுட்டில் கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்ப்பதற்கு அனுமதி இல்லை. அதனால் அவர் வீட்டில் இருந்த 2 பல்லிகள், 26 சிலந்திகளை விலங்குகள் நல கட்டுபாட்டு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் ஊர்வன பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் கெவின் டோரெக்ரோசா கூறுகையில், “கிலா மான்ஸ்டர்ஸால் கடிக்கப்படுவதும் அதனால் ஒருவர் இறப்பதும் மிகவும் அரிது. எனது தொழில் அனுபவத்தில் நான் அறிந்த முதல் இறப்பு இதுதான். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இப்பல்லியால் மரணம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவரை பல்லி நான்கு நிமிடங்கள் வரை கடித்ததில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால் இந்த வகை பல்லிகள் கடித்து, இறுக்கமாகப் பிடித்து, மென்று தங்களது விஷத்தை வெளியிடும். அந்த விஷம் மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
இந்தப் பல்லிகள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை, தற்காத்துக் கொள்ளவே தங்களது விஷத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன’’ என்று கூறியுள்ளார்.