Last Updated:
இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி, 17 மற்றும் 62 ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அசத்தினார்.
வட அமெரிக்காவில் புகழ்பெற்ற கால்பந்தாட்ட தொடரான மேஜர் லீக் சாக்கர் என்ற MLS தொடரில், தொடர்ந்து 5 போட்டிகளில் 2 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி ஏற்படுத்தியுள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த லியானல் மெஸ்ஸி, இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்.எல்.எஸ். கால்பந்து தொடரில், மெஸ்ஸியின் இன்டர் மியாமி கிளப் அணி, நாஷ்வில்லி என்ற அணியுடன் மோதியது.
இதில், இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி, 17 மற்றும் 62 ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அசத்தினார்.
ஆட்ட நாயகன் விருதை வென்ற மெஸ்ஸி, ஏற்கெனவே, எம்.எல்.எஸ். கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 2 கோல்கள் அடித்திருந்தார்.
July 14, 2025 7:18 PM IST


