Last Updated:
போர் முடிவால் மனமகிழ்ச்சி அடைந்துள்ள மக்கள், மீண்டும் தங்களது சொந்த நிலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹெசபுல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து லெபனான் மக்கள் மீண்டும் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வந்த போர் ஒருவழியாக முடிவுக்கு வந்து, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் இரு நாட்டு மக்களும் கொஞ்சம் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹெசபுல்லா அமைப்புக்கும் இடையே ஏறத்தாழ 3 ஆண்டுகளாக நடந்த மோதல், அண்மையில் முடிவுக்கு வந்தது.
Families Return to Southern Lebanon as Ceasefire Brings Movement
Roads fill with residents heading home after the latest truce, while Israeli forces remain positioned in parts of the border area. #WashingtonEye pic.twitter.com/KgkKZ2CdaA— Washington Eye (@washington_EY) June 22, 2026
இத்துடன் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்துடன், இஸ்ரேல் – ஹெசபுல்லா இடையிலான மோதலை நிறுத்திக்கொள்ளவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லெபனானில் அமைதி திரும்புகிறது. போர் முடிவால் மனமகிழ்ச்சி அடைந்துள்ள மக்கள், மீண்டும் தங்களது சொந்த நிலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். பொது மக்களின் படையெடுப்பால் லெபனான் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Jun 24, 2026 10:28 AM IST

