தேனி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மா, தென்னை, பன்னீர் திராட்சை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போடி சுற்றுவட்டார பகுதிகளில் மா விவசாயம் அதிகமாக நடைபெற்று வருவதால் மாங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து தேனி நகரம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்மணி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வரும் உமா என்ற பெண்மணி சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு மாவிவசாயம் நடைபெறுவதால், மாங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சார்ந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் என எண்ணியுள்ளார். இதற்காக காமாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள கே வி கே வேளாண் அறிவியல் மையத்தில் மாங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக மாங்காய் பார் மாங்காய் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு பல்வேறு வகையான உணவு பொருட்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். தனது வீட்டின் மேற்புறத்தில் சோலார் டிரையர் உதவியுடன் மாதத்திற்கு 100 முதல் 120 கிலோ மாங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை மேற்கொண்டு வருகிறார் . குறிப்பாக அருகில் கேரள மாநிலம் இருப்பதால் மாங்காயில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்கு அதிக தேவை இருப்பதை அறிந்து கொண்ட இவர் , மாதந்தோறும் 20, 000 ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)