நலனை மலேசியாவின் முன்னணி ‘ஹலால்’ சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ‘மக்கள் முதன்மைப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட முன்னணி சொத்து மேம்பாட்டு நிறுவனமான LBS Bina Group Berhad தனது முதன்மை நகரத் திட்டமான KITA @Cybersouth இல் சில்லறை, வணிகச் சூழலை மேம்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஒத்துழைப்பு KITA Cybersouth-இன் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
ஏனெனில், மைடின் இந்த நகரத்தில் அமையவுள்ள முதல் சூப்பர் மார்க்கெட்டாக மாறவுள்ளது. இதன் வருகையானது அப்பகுதி குடியிருப்பாளர்கள், சுற்றியுள்ள சமூகத்தினருக்கு அதிக வசதியையும் எளிதான அணுகலையும் வழங்குவதோடு, நகரத்தின் வளர்ந்து வரும் வணிகச் சூழலை வலுப்படுத்தி, அதனை ஒரு துடிப்பான, சிறந்த போக்குவரத்துத் தொடர்புகளைக் கொண்ட சமூகமாக மாற்றுவதற்கும் உதவும். LBS ‘KITA Merdeka’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இம்மாதம் 5ஆம் தேத் KITA Cybersouth-இல் உள்ள LBS Discovery Gallery-இல் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் விழாவில் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் LBS-இன் குழும நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ வீரா லிம் ஹாக் குவான், மைடினின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா (டாக்டர்) ஹாஜி அமீர் அலி மைடின் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் LBS குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ (டாக்டர்) லிம் ஹாக் சான், மைடினின் நிர்வாக இயக்குநர் துவான் அஹிம்மத் மைடின் ஆகியோர் சாட்சிகளாகக் கலந்துகொண்டனர்.


இந்த முக்கிய ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த LBS குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பொறியாளர் (டாக்டர்) லிம் ஹாக் சான் கூறியதாவது: “KITA Cybersouth தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நகரத்திற்குள் உள்ள வசதிகளும் சேவைகளும் மேம்படுத்தப்படுவது அவசியமாகும். அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கும் வகையிலான ஒரு முழுமையான சமூகத்தை உருவாக்குவதற்கான மற்றொரு நடவடிக்கையாக, இந்த நகரத்தின் முதல் சூப்பர்மார்க்கெட்டாக மைடினை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைடின் உள்ளூர் நுகர்வோர் குறித்த ஆழமான புரிதலைக் கொண்ட ஒரு நம்பகமான மலேசிய வர்த்தக முத்திரையாகும்; அவர்களை KITA Cybersouth-க்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய மைடினின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா (டாக்டர்) ஹாஜி அமீர் அலி மைடின் புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகள், புதிய வளர்ச்சிப் பகுதிகளை உருவாக்குவதில் LBS கொண்டுள்ள அனுபவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்களுடனான இந்த ஒத்துழைப்பு மைடினுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
சுமார் 633 ஏக்கர் மலாய் ஒதுக்கப்பட்ட நிலத்தில் அமைந்துள்ள KITA Cybersouth, வீடுகள், வணிக வசதிகள், இணைப்பு, சமூக வசதிகளை ஒரு சிறந்த சூழலில் ஒன்றிணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த நகரமாகச் சிந்தனையுடன் திட்டமிடப்பட்டுள்ளது. மைடின் சுமார் 1.37 ஏக்கர் நிலப்பரப்பில் 24,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இது, தற்போது 1,399,000 ரிங்கிட் முதல் விலையிடப்பட்ட கடை மனைகளைக் கொண்ட KITA Avenue Square இன் தற்போதைய வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. இந்த சில்லறை விற்பனை வசதிகள், குடியிருப்பாளர்களுக்குப் பரந்த அளவிலான பொருட்கள், சேவைகளை வழங்குவதோடு, நகரத்தின் வணிகச் சூழலுக்குள் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



