அப்போது இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நெருக்கமாக அணைத்தபடி நின்றுகொண்டிருந்தனர். கேமரா தங்களை நோக்கித் திரும்பியதை உணர்ந்ததும், அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக விலகி, தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர். இதை மேடையிலிருந்தபடியே கவனித்த கோல்ட்பிளே பாடகர் கிறிஸ் மார்ட்டின், ‘ஓ, இவர்கள் இருவரையும் பாருங்கள்… அவர்கள் கள்ள உறவில் இருக்க வேண்டும் அல்லது மிகவும் வெட்கப்படுகிறார்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறினார்.இதைக் கேட்டதும் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலை எழுந்தது. கிறிஸ் மார்ட்டின் கிண்டலடித்த இந்தச் சம்பவம், உடனடியாக சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது. டிக்டாக், ரெட்டிட், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி, பெரும் விவாதப் பொருளாக மாறியது. பலரும் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியையும், கேலியையும், விமர்சனத்தையும் ஒருசேர வெளிப்படுத்தினர். சிலர், ஆண்டி பைரனின் மனைவிக்கு அனுதாபம் தெரிவித்தும் வருகின்றனர்.
The post ‘kiss cam’ நேரலையில் CEO-பெண் HR நெருக்கம்: கார்ப்பரேட் உலகில் பரபரப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

