லங்காவி : இதய நோயால் பாதிக்கப்பட்டு மலேஷியாமருத்துவமனையில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்ட நார்வே நாட்டு மன்னர், 87, நேற்று நாடுதிரும்பினார்.
ஐரோப்பிய நாடான நார்வேயின் மன்னர் ஹெரால்ட், சமீபத்தில் தன் 87வது பிறந்த நாளை கொண்டாடினார். இதன் தொடர்ச்சியாக தன் குடும்பத்தினருடன் அவர் மலேஷியா நாட்டுக்கு சுற்றுலா சென்றார்.
ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வந்த மன்னருக்கு, சில நாட்களுக்கு முன், அங்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
நோய் தொற்றுக்கு ஆளான அவர், லங்காவியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இதயநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக இதய துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி ஹெரால்டுக்கு பொருத்தப்பட்டது.
இதையடுத்து, மலேஷிய மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றிச் செல்ல உதவும் மருத்துவ விமானம் வாயிலாக மன்னர் ஹெரால்டு நார்வே நாட்டுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக நார்வே அரச குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மன்னரின் உடல்நிலை சீராக உள்ளது. நாடு திரும்பியதும் மருத்துவமனையில் உரிய சிகிக்சை அளிக்கப்படும். இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement