Last Updated:
Karate Championship| குமித்தே பிரிவில் 5 தங்க மெடல்களும், கட்டா பிரிவில் 4 வெள்ளி மெடல்களும் வென்ற தஞ்சை வீராங்கள்.
டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கம் 4 வெள்ளிப் பதக்கம் வென்று தஞ்சை வந்த வீரர், வீராங்கனைகளை சக வீரர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். 5-ம் வகுப்பு வரை பள்ளியில் கராத்தே பயிற்சி கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என பயிற்சியாளர் அன்பரசன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
டெல்லியில் கடந்த வாரம் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது. 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இப்போட்டியில் தமிழக அணி சார்பில் தஞ்சையில் இருந்து 9 வீரர், வீராங்கனைகள் சென்றனர். குமித்தே பிரிவில் 5 தங்கப் பதக்கங்களும், கட்டா பிரிவில் 4 வெள்ளிப் பதக்கங்களும் வென்று இன்று தஞ்சை வந்தனர். தஞ்சை ரயில் நிலையத்தில் சக வீரர், வீராங்கனைகள் அவர்களை பூக்கள் தூவி வரவேற்றனர்.
வெற்றி வீரர், வீராங்கனைகளுக்கு பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம் சால்வை அணிவித்துப் பாராட்டினார். 5-ம் வகுப்பு வரை கராத்தே பயிற்சியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என பயிற்சியாளர் அன்பரசன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 02, 2025 5:02 PM IST

