கொப்பால் : ‘ஓட்டு கேட்டு வந்தால் கொப்பால் பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கியாவடாரை அடிப்போம்’ என்று, தற்போதைய எம்.பி., கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள் மிரட்டி உள்ளனர்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, கர்நாடக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. கொப்பால் தொகுதி சிட்டிங் எம்.பி., கரடி சங்கண்ணாவுக்கு சீட் கை நழுவியது. டாக்டரான பசவராஜ் கியாவடாருக்கு சீட் கிடைத்து உள்ளது.
இதையடுத்து, கரடி சங்கண்ணாவின் வீட்டிற்கு நேற்று இரவு அவரது ஆதரவாளர்கள் சென்றனர். ‘வளர்ச்சி பணிகள் செய்த உங்களை பா.ஜ., மேலிடம் மதிக்கவில்லை. உடனடியாக கட்சியில் இருந்து விலகுங்கள்’ என்று வலியுறுத்தினர்.
‘கொப்பால் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பணம் வாங்கி கொண்டு, பசவராஜ் கியாவடாருக்கு சீட் வாங்கி கொடுத்து உள்ளனர். அவரை நாங்கள் பார்த்ததே இல்லை. யார் என்றே தெரியாது. ஓட்டு கேட்க வரட்டும். அவரை அடித்து விரட்டுவோம்’ என்று, கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள் ஆவேசமாக கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement