• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Jio IPO தேதி வெளியானது.. பணத்தை இப்பவே ரெடி பண்ணுங்க பாஸ்..! | Jio Platforms IPO Dates Announced: Opens October 21 for India’s Biggest Public Offer Ever

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Jio IPO தேதி வெளியானது.. பணத்தை இப்பவே ரெடி பண்ணுங்க பாஸ்..! | Jio Platforms IPO Dates Announced: Opens October 21 for India’s Biggest Public Offer Ever
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Jio IPO தேதி வெளியானது.. பணத்தை இப்பவே ரெடி பண்ணுங்க பாஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக வெளியாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் அக்டோபர் 14ஆம் தேதி ஐபிஓ வெளியிடுவதற்கான முழு திட்டத்தையும் RHP அறிக்கையின் வாயிலாக சமர்ப்பித்துள்ளது.

ஜியோ பிளாட்பார்ம்ஸ்-ன் ஐபிஓ கதவுகள் அக்டோபர் 21ஆம் தேதி திறந்து அக்டோபர் 23ஆம் தேதி மூடப்படுகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் அக்டோபர் 19ஆம் தேதி திங்கட்கிழமையே திறக்கப்படுகிறது. ஏற்கனவே கணித்தன் படி அடித்த வாரம் ஜியோ ஐபிஓ வெளியாகிறது, இந்த அதிகாரப்பூர்வ தேதிகளை ரிலையன்ஸ் இன்று வெளியிட்டது.

 Jio IPO தேதி வெளியானது.. பணத்தை இப்பவே ரெடி பண்ணுங்க பாஸ்..!

இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 27 கோடி பங்குகளை 10 ரூபாய் முகமதிப்புடன் விற்பனை செய்து முதலீட்டைத் திரட்ட உள்ளது. இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்காக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காகவும் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் ஐபிஓ குழு இன்று நடத்திய கூட்டத்தில், இந்த மெகா ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரூ.1065 – ரூ.1119 என்ற வரம்பில் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஐபிஓ-வில் உச்சபட்ச விலையான ரூ.1119 அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டிலால், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் சுமார் ரூ.30,213 கோடி வரையிலான நிதியை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் 10.3 லட்சம் கோடி மதிப்பீட்டைப் பெறும் என தெரிகிறது.

இதன் மூலம், இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்ட நிறுவனம் என்ற சாதனையை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவாக்க உள்ளது. இதற்கு முன்பு ஹூண்டாய் மோட்டார் இந்தியா 2024ல் வெளியிட்ட ஐபிஓ-வில் ரூ.27,870 கோடி திரட்டி முதலிடத்தை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான ஐபிஓ-க்களில் offer-for-sale என்ற ஒரு பிரிவு இருக்கும், ஆனால் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ-வில் அப்படியொரு விஷயமே இல்லை. அதாவது ஏற்கனவே இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பவர்கள் ஐபிஓ வெளியிடும் போது விற்கப்படும் பங்குகளை offer-for-sale பிரிவில் விற்பார்கள்.

ஆனால் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள மெட்டா, கூகுள் மற்றும் வளைகுடா நாடுகளின் முதலீட்டு அமைப்புகள் பங்குகளை விற்க வேண்டாம் என முடிவு செய்திருக்கும் காரணத்தால் 27 கோடி பங்குகளும் fresh issue ஆகவே வெளியாக உள்ளது.

ஏற்கனவே க்ரே மார்கெட்டில் ஜியோ பங்குகள் 218 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வரும் காரணத்தால் இதன் மதிப்பு 1337 ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த ஐபிஓ-வில் அப்பர் பேண்ட் அளவு 1119 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Share This Article

English summary

Jio Platforms IPO Dates Announced: Opens October 21 for India’s Biggest Public Offer Ever

Jio Platforms IPO Dates Announced: Opens October 21 for India’s Biggest Public Offer Ever — Jio IPO தேதி வெளியானது.. பணத்தை இப்பவே ரெடி பண்ணுங்க பாஸ்..!

Story first published: Wednesday, October 14, 2026, 19:47 [IST]

Read More

Previous Post

ஐதராபாத் அணிக்கு கம்பேக் கொடுத்த நடராஜன்.. சொல்லி அடித்த காவ்யா மாறன்.. மிக்சர் சாப்பிடும் சிஎஸ்கே! | Natarajan: T Natarajan trades to SRH and Zeeshan Ansari trades to DC which surprised CSK Fans

Next Post

சடங்கு தொடர்பான சர்ச்சைகளில் தலையிட வேண்டாம், பிரச்சினையை மேலும் தூண்டிவிடாதீர்கள் – Malaysiakini

Next Post

சடங்கு தொடர்பான சர்ச்சைகளில் தலையிட வேண்டாம், பிரச்சினையை மேலும் தூண்டிவிடாதீர்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin