இந்த ஆண்டும் அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி தங்கம் வாங்குவதற்கு ஏராளமானோர் தயாராகியுள்ளனர். அந்த நாளில் தங்கம் வாங்கினால் அது எப்போதும் நீடித்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் அட்சய திருதியை முன்னிட்டு ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அவர்களுக்காக ஜியோ நிறுவனம் Jio Gold 24K Days என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. ட்சய திருதியையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கான சலுகைகளை ஏப்ரல் 29 முதல் மே 5 வரை வழங்குகிறது.
ஜியோ ஃபைனான்ஸ் மற்றும் மைஜியோ பயன்பாடுகளின் பயனர்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் போது சிறப்பு சலுகைகளிலிருந்து பயனடையலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 29, 2025 முதல் மே 5, 2025 வரையிலான ஜியோ கோல்டு 24K டேஸின் முதல் பதிப்பின் போது, ரூ.1,000 முதல் ரூ.9,999 வரையிலான டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு JIOGOLD1 என்ற சலுகைக் குறியீட்டைப் பயன்படுத்தி 1% இலவச தங்கம் கிடைக்கும். 10,000 ரூபாய்க்கு மேல் வாங்கினால், வாடிக்கையாளர்கள் 2% இலவச தங்கத்தைப் பெறுவார்கள்.
இதற்காக செக் அவுட்டின் போது JIOGOLDAT100 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தவும். ஆஃபர் காலத்தில் ஒரு பயனருக்கு 10 பரிவர்த்தனைகள் வரை இந்த ஆஃபர் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் கூடுதல் டிஜிட்டல் தங்கத்தை வாங்கிய நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் பெறுவார்கள். ஒரு வாடிக்கையாளர் பெறக்கூடிய இலவச தங்கத்தின் அதிகபட்ச மதிப்பு ரூ.21,000 ஆகும். இந்தச் சலுகை தங்கத்தை மொத்தமாக வாங்கினால் மட்டுமே செல்லுபடியாகும்.
இதையும் படிங்க – எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? – முழு விவரம் இதோ!
ஜியோ தங்கமானது டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கும், ரொக்கம், தங்க நாணயங்கள் அல்லது தங்க நகைகள் போன்ற வடிவங்களில் முதலீடுகளை மீட்டெடுப்பதற்கும் முழுமையான டிஜிட்டல், பாதுகாப்பான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது.
10 ரூபாயில் இருந்து தொடங்கும் முதலீடுகள் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
April 29, 2025 12:07 AM IST
Jio Gold 24K Days : அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குவாருக்கு ஆஃபரை அறிவித்த ஜியோ.. 7 நாட்களுக்கு சூப்பர் சலுகை

