Last Updated:
ஜப்பானியர்களின் பிரதான உணவான சூஷி, ஷசிமி உள்ளிட்டவற்றில் டுனா மீன்கள் சேர்க்கப்படுகின்றன.
ஜப்பானில் புத்தாண்டு ஏலத்தில் டுனா மீன், 28 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புத்தாண்டை ஒட்டி டோக்கியோவில் நடந்த மீன் ஏலத்தில், 234 கிலோ எடையிலான டுனா மீன் இந்திய மதிப்பில் 28 கோடியே 87 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ டுனா மீன் இந்திய மதிப்பில் 12 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.
புரதச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்து காணப்படும் டுனா மீன் ஜப்பானியர்களின் விருப்ப உணவாக காணப்படுகிறது. ஜப்பானியர்களின் பிரதான உணவான சூஷி, ஷசிமி உள்ளிட்டவற்றில் டுனா மீன்கள் சேர்க்கப்படுகின்றன.

அதிலும், வடக்கு ஜப்பானின் ஒமா கடற்பகுதியில் காணப்படும் டுனா மீனுக்கு ஜப்பானியர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. இனப்பெருக்கம் குறைவு, அதிகளவில் மீன் பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் அழிவின் விளிம்பில் டுனா மீன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


