ஏனெனில், இது அதிகபட்ச விலக்குகளைப் பெறவும், வரி செலுத்துவதைத் தவிர்க்கவும், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் தொகையை அதிகரிக்கவும் உதவும். எனவே, கடைசி நேர பதற்றம் மற்றும் தவறுகளைத் தவிர்க்க, ITR தாக்கல் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
சரியான ITR ஃபார்மை தேர்வு செய்யவும்:
சரியான ITR ஃபார்மை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் தவறான ஃபார்மை தாக்கல் செய்தால், உங்கள் வருமானம் நிராகரிக்கப்படலாம். உதாரணமாக, உங்கள் வருமானம் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திலிருந்து மட்டுமே இருந்தால், நீங்கள் ITR-1 ஐப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உங்கள் வருமானம் ரூ.50 லட்சத்தைத் தாண்டினால், அல்லது உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு வருமானம் இருந்தால் ITR-2 ஐப் பயன்படுத்த வேண்டும். மறுபுறம், உங்கள் வருமானமானது வணிகம் அல்லது தொழிலில் இருந்து வந்தால், உங்களுக்கு ITR-3 அல்லது ITR-4 தேவைப்படலாம். எனவே, ஃபார்மை சமர்ப்பிக்கும் முன்பு எப்போதும் அதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.
ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவும்:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்பு, உங்கள் ஆதார் எண், பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ITR தாக்கல் செய்ய, உங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். எனினும், நீங்கள் அதை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் செயலிழந்து, தாக்கல் செய்யும் செயல்முறையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருங்கள்:
நீங்கள் தாக்கல் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து முக்கிய ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும். ஃபார்ம் 16, ஃபார்ம் 26AS மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) ஆகியவற்றை தயாராக வைத்திருங்கள். மேலும், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் வட்டி வருமானச் சான்றிதழ்களும் முக்கியம். இது தவிர, 80C அல்லது 80Dஇன் கீழ் விலக்குகளைப் பெற முதலீடு தொடர்பான சான்றிதழ்களைத் தயாராக வைத்திருங்கள்.
பழைய மற்றும் புதிய வரி முறைக்கு இடையே தேர்வு செய்யவும்:
பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை ஆகிய இரண்டு வரி முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது. பழைய வரிவிதிப்பு முறை பல்வேறு விலக்குகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது, அதே நேரத்தில் புதிய வரிவிதிப்பு முறையானது குறைந்த வரி விகிதங்களைக் கொண்டுள்ளது, ஆனால், குறைவான விலக்குகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.
உங்கள் வருமானம் மற்றும் தகுதியான விலக்குகளின் அடிப்படையில் எந்த வரி முறை உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை மதிப்பிடுங்கள். உங்களிடம் வணிகம் அல்லது தொழில்முறை வருமானம் இருந்தால், பழைய வருமான வரி முறையைத் தொடர விரும்பினால், வருமான வரித் தாக்கல் செய்வதற்கு முன் ஃபார்ம் 10-IEA-வைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறியதாக இருந்தாலும்கூட, அனைத்து வருமானத்தையும் தெரிவிக்கவும்:
சம்பளத்தை தவிர வங்கி வட்டி, சொத்தில் இருந்து வாடகை, ஃப்ரீலான்ஸ் பேமென்ட்ஸ் மற்றும் சிறிய முதலீடு போன்ற மற்ற வகை வருமானங்களைப் பற்றியும் ரிப்போர்ட் செய்வது முக்கியமாகும். அனைத்து வருமானத்தையும் பற்றி ரிப்போர்ட் செய்வது, வருமானவரித் துறையிடமிருந்து வரும் நோட்டீஸ்களை தவிர்க்க உதவுகிறது.
வருமான வரித்தாக்கல் செய்தபிறகு சரிபார்ப்பு அவசியம்:
ஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்வது செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே. இரண்டாவது பகுதி சரிபார்ப்பு ஆகும். ITR-ஐச் சமர்ப்பித்த பிறகு, ஆதார் OTP, இன்டர்நெட் பேங்கிங் அல்லது பிற விருப்பங்களைப் பயன்படுத்தியோ அல்லது ITR-V ஃபார்மை பிரிண்ட் எடுத்து கையெழுத்து போட்டு பெங்களூருவில் உள்ள சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டருக்கு (CPC) அனுப்புவதன் மூலமோ உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் இந்த ஸ்டேப்-ஐ தவிர்த்தால், உங்கள் ITR வரித்துறையால் செயல்படுத்தப்படாது.
ITR Filing 2025 | வரிக்கணக்கை தாக்கல் செய்யப் போறீங்களா…? நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான 6 விஷயங்கள் இவைதான்…!

