கேள்வி 3: ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-4 வரை உள்ள படிவங்கள் யாருக்குப் பொருந்தும்? பதில்: தனிநபர்களின் வருமான ஆதாரங்களின் அடிப்படையில் படிவங்கள் பிரிக்கப்பட்டுள்ளன: ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2: மாதச் சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், கணக்குத் தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத தனிநபர்கள், சொத்து விற்பனை லாபம் மற்றும் முதலீட்டு வட்டி வருமானம் கொண்டவர்களுக்கானது. ஐடிஆர்-3: தணிக்கை தேவைப்படாத வணிகர்கள், இந்து கூட்டுக் குடும்பத் தலைவர்கள் (HUF), வாடகை வருவாய் ஈட்டுவோர், பங்குச்சந்தை மற்றும் ஊக வணிகத்தில் ஈடுபடுவோர், மற்றும் கூட்டாண்மை (Partnership) நிறுவனங்களின் பங்காளர்களின் பயன்பாட்டிற்கானது. (குறிப்பு: பார்ட்னர்ஷிப் அல்லது வணிக வருமானம் இல்லாதவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது). ஐடிஆர்-4: ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில்முறை வருவாய் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கானது. சம்பளம், வட்டி, விவசாயம் மூலம் ரூ.5,000 வரை மற்றும் மூலதன ஆதாயமாக ரூ.1.25 லட்சம் வரை பெறுவோர் இதைத் தேர்வு செய்யலாம்.


