• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ITR | உங்களது ஆண்டு ஊதியம் 18,20,000 ரூபாயா…? அப்படின்னா நீங்க வரியே செலுத்த வேண்டாம்… எக்ஸ்பர்ட் கூறுவது இதுதான்…!

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ITR | உங்களது ஆண்டு ஊதியம் 18,20,000 ரூபாயா…? அப்படின்னா நீங்க வரியே செலுத்த வேண்டாம்… எக்ஸ்பர்ட் கூறுவது இதுதான்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒரு சில கழித்தல்கள் பழைய வரி விதிப்பு முறையில் கிடைக்கிறது. அதே நேரத்தில், வேறு சில புதிய வரி விதிப்பு முறையின் கீழ் மட்டுமே கிடைக்கிறது. புதிய வரி விதிப்பு முறையில் பழைய வரி விதிப்பு முறையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த பதிவில் ஒரு ஆண்டுக்கு ₹18,20,000 ரூபாய் வருமானம் பெறக்கூடிய ஒருவர் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் 0 வரியை செலுத்துவதற்கான நிபுணர்கள் வழங்கும் கணக்கீடுகளைப் பார்க்கலாம்.

முதலில், பழைய வரி விதிப்பு முறையின் கீழ் எவ்வளவு வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். அப்படிப் பார்க்கும்போது, ஒரு ஆண்டுக்கு ₹5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தைப் பெறுபவர்கள் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்தத் தேவையில்லை.

பழைய வரி விதிப்பு முறை: விலக்குகள் மற்றும் கழித்தல்கள்

வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80C என்பது மிகவும் பிரபலமான ஒரு பிரிவாக அமைகிறது. இது குறிப்பிட்ட சில செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு விலக்குகளை வழங்குகிறது. மொத்தமாக, பழைய வரி விதிப்பு முறையின் கீழ் 70 விலக்குகள் மற்றும் கழித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவு 80C-ன் கீழ் எவற்றிற்கெல்லாம் உங்களால் கிளைம் செய்ய முடியும்?

மொத்த வருமானத்தில் ₹1.5 லட்சம் ரூபாய் வரை உங்களால் கழித்தல்களாகக் கிளைம் செய்ய இயலும். இதில் நீங்கள் EPF (எம்ப்ளாய் பிராவிடண்ட் ஃபண்ட்), PPF(பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்), ELSS (ஈக்விட்டி லிங்குடு சேவிங்ஸ் ஸ்கீம்), NSC (நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்), SSY (சுகன்யா சம்ரிதி ஸ்கீம்), SCSS (சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்) போன்றவற்றைக் கணக்கில் காட்டலாம்.

ஒரு ஆண்டுக்கு ₹18,20,000 ரூபாய் வருமானத்தில் 0 வரி செலுத்துவது எப்படி?

இந்தப் பதிவில், ஒரு ஆண்டுக்கு ₹18,20,000 ரூபாய் வருமானம் பெற்றாலும் 0 வரியை எப்படி செலுத்துவது என்பதற்கான நிபுணர் கணக்கீடுகளைப் பற்றி பார்க்கலாம்.

CTC: ₹18,20,000

அடிப்படை சம்பளம்: ₹9,10,000

80C கழித்தல்களுக்குப் பிறகான சம்பளம்:

₹18,20,000 – ₹1,50,000 (EPF, PPF, மற்றும் பல)

= ₹16,70,000

பிரிவு 80D கழித்தல்களுக்குப் பிறகு 80D-ன் கீழ் தனிநபர்கள் ஒரு நிதியாண்டிற்கு சீனியர் சிட்டிசன்களுக்கான மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு ₹50,000 ரூபாய் வரையிலும், மற்றவர்கள் ₹25,000 ரூபாய் வரையிலும் கழித்துக் கொள்ளலாம்.

= ₹16,70,000 – ₹25,000

= ₹16,45,000

பிரிவு 80D – பெற்றோர்களுக்கு பெற்றோர்களின் வயது 60-க்கும் அதிகமாக இருக்கும் என்பதைத் தோராயமாக எடுத்துக்கொண்டு, பிரிவு 80D-ன் கீழ் ₹50,000 ரூபாய் விலக்கம் செய்யப்படுகிறது.

= ₹16,45,000 – ₹50,000

= ₹15,95,000

வீட்டுக் கடனுக்கான வட்டி:

வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு பிரிவு 24B-ன் கீழ் ₹2 லட்சம் ரூபாய் வரை விலக்கு கோரலாம்.

= ₹15,95,000 – ₹2,00,000

= ₹13,95,000

கல்விக் கடனுக்கான வட்டி:

கல்விக் கடனுக்கான வட்டி என்பது வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80E-ன் கீழ் வருகிறது. கல்விக் கடனுக்கு நீங்கள் செலுத்திய மொத்த வட்டிப் பணத்தை இதில் நீங்கள் கிளைம் செய்யலாம். இங்கு கல்விக் கடன் வட்டியின் கீழ் ₹90,000 ரூபாயை விலக்காகக் கோரலாம். எனவே, வரிக்கு உட்பட்ட வருமானம் என்பது

= ₹13,05,000 (₹13,95,000 – ₹90,000)

நிலையான கழித்தல்கள்:

₹50,000 ரூபாய் நிலையான கழித்தல் செய்வதற்கு அரசு அனுமதிக்கிறது.

= ₹13,05,000 – ₹50,000

= ₹12,55,000

NPS பங்களிப்பு – சுயமாகச் செய்வது + நிறுவனம் செய்வது:

நீங்கள் செய்யும் NPS பங்களிப்புக்கு வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80 CCD 1B-இன் கீழ் விலக்கு கோரலாம். இதற்கான அதிகபட்ச வரம்பு ₹50,000 ரூபாய். மேலும், உங்களுடைய நிறுவனத்தின் (பிரிவு 80 CCD 2B) NPS பங்களிப்பின் கீழ் அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அளவன்ஸில் 10% கிளைம் செய்யலாம்.

NPS-க்குப் பிறகான வரிக்கு உட்பட்ட வருமானம்:

இங்கு நாம் NPS-க்கு ₹50,000 ரூபாயை உங்களுடைய பங்களிப்பாகவும், ₹1,08,000 ரூபாயை நிறுவனத்தின் பங்களிப்பாகவும் எடுத்துக் கொள்வோம். எனவே, NPS கழித்தல்களுக்குப் பிறகான உங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானம் என்பது ₹10,97,000 – [₹12,55,000 – (₹50,000 + ₹1,08,000)]

HRA விலக்கு:

அதிகபட்ச HRA விலக்கு என்பது ₹4,80,000 ரூபாய். இதற்கு நீங்கள் இரண்டு நிபந்தனைகளின் கீழ் விலக்கு கோரலாம். உண்மையில் பெறப்பட்ட HRA – ₹6,00,000 மற்றும் உண்மையாக செலுத்திய வாடகை – ₹6,00,000 (ஒரு ஆண்டுக்கு)

= ₹10,97,000 – ₹4,80,000

= ₹6,17,000

நன்கொடைகள்:

பிரிவு 80G-ன் கீழ் உங்களுடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து 10% வரை அதிகபட்சமாக உங்களால் நன்கொடைகளுக்குக் கிளைம் செய்ய முடியும். எனவே, இங்கு ₹40,000 ரூபாயை நன்கொடைகளாக எடுத்துக் கொள்வோம்.

= ₹6,17,000 – ₹40,000

= ₹5,77,000

நெகிழ்வு ஊதியம் (Flexi pay):

LTA + உணவுக்கான சலுகை + புத்தகங்கள் மற்றும் அவ்வப்போது வழங்கப்படுவது

(₹60,000 + ₹43,200 + ₹21,600)= ₹1,24,800

= ₹5,77,000 – ₹1,24,800 = ₹4,52,200

இறுதியான வரிக்கு உட்பட்ட வருமானம்:

இப்போது உங்களுடைய இறுதி வரிக்கு உட்பட்ட வருமானம் என்பது ₹4,52,200 ரூபாய். அதாவது, இப்போது நீங்கள் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் எந்த ஒரு வரியையும் செலுத்தத் தேவையில்லை. ஏனெனில், ₹5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி வசூல் செய்யப்படாது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ITR | உங்களது ஆண்டு ஊதியம் 18,20,000 ரூபாயா…? அப்படின்னா நீங்க வரியே செலுத்த வேண்டாம்… எக்ஸ்பர்ட் கூறுவது இதுதான்…!

Read More

Previous Post

இந்திய ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி விலக்கு… நகராட்சி எடுத்த முக்கிய முடிவு

Next Post

அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியைத் திருப்பித் தர வேண்டும் – Malaysiakini

Next Post
அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியைத் திருப்பித் தர வேண்டும் – Malaysiakini

அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியைத் திருப்பித் தர வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin