நாடு முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளும் விழிப்புடன் உள்ளன. வருமான வரித்துறையும் (IT) உஷார்படுத்தப்பட்டு ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கவனித்து தெரிவித்து இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு அவற்றை சரிபார்த்து, கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை ஐடி துறை திருப்பி அளிக்கும். இது வரியை திரும்பப் பெறுதல் என்று அழைக்கப்படுகிறது. இதை கவனித்த மோசடியாளர்கள், இதன் மூலம் ஏதாவது மோசடி செய்யலாம் என நினைத்து, கூடுதல் வரி செலுத்தியோருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அதாவது, “நீங்கள் ரூ.15,000 வருமான வரி திரும்பப் பெற்றுள்ளீர்கள். உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய விரும்புகிறோம். உங்கள் வங்கிக் கணக்கு எண் (5XXXXX6777) ஒன்றா? அவ்வாறு இல்லையெனில், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் ( https://bit.ly/20wpUUX )” லிங்க் அனுப்பப்படுகிறது. தவறுதலாக அந்த லிங்கை கிளிக் செய்தால், அந்த மொபைலை வைரஸ் தாக்கும். அதன் பிறகு மொபைல் தொடர்பு எண்கள், பாஸ்வேர்டுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து தகவல்களையும் திருடி நெட் மூலம் ஹேக்கருக்கு அனுப்புகிறது. எனவே, இதுபோன்ற இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், வருமான வரித்துறையில் இருந்து அழைப்பதாக கூறும் சிலர், சில தவறுகள் நடந்திருப்பதாகவும், உடனடியாக அபராதம் செலுத்தாவிட்டால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கூறி பணம் பறிக்கும் கும்பலும் இருக்கிறது. இப்படி பல வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை நம்ப வேண்டாம் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை – மத்திய அரசு சொன்ன உறுதியான தகவல்!
எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திருட சைபர் குற்றவாளிகள் புதுப்புது முயற்சிகளை செய்து வருகின்றனர். தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அதை கவனமாக கையாளவும். எந்த சூழ்நிலையிலும் உங்கள் தனிப்பட்ட விவரங்களை அந்த எண்ணுக்கு கொடுக்க வேண்டாம். ஹேக்கர்களுக்கு சில விவரங்கள் தெரிந்தாலும், அவர்கள் அனைத்து தகவல்களையும் பெற முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியும். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)