• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

IT உலகை ஆக்கிரமிக்கும் ஏஜென்டிக் ஏஐ! இத கத்துக்கலனா எல்லாம் போச்சு! ஆபீஸில் சத்தம் இல்லாமல் நடக்கும் கூத்து! | Employee Skilling in Agentic AI Soars as Firms Prepare for the Next AI Wave

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
IT உலகை ஆக்கிரமிக்கும் ஏஜென்டிக் ஏஐ! இத கத்துக்கலனா எல்லாம் போச்சு! ஆபீஸில் சத்தம் இல்லாமல் நடக்கும் கூத்து! | Employee Skilling in Agentic AI Soars as Firms Prepare for the Next AI Wave
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


IT உலகை ஆக்கிரமிக்கும் ஏஜென்டிக் ஏஐ! இத கத்துக்கலனா எல்லாம் போச்சு! ஆபீஸில் சத்தம் இல்லாமல் நடக்கும் கூத்து!

IT துறையை சத்தமின்றி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் AI தொழில்நுட்பத்தை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன. ஆனால் இப்போது அப்படி இல்லை. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சியை வாரி வழங்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் இது தொடர்பாக edForce நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கார்ப்பரேட் உலகில் நடக்கும் சில அதிரடியான மாற்றங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

edForce நிறுவனம் “என்டர்பிரைஸ் லேர்னிங் ரிப்போர்ட் FY2025-26” என்ற அறிக்கையில் இந்த ஆண்டில் “ஏஜென்டிக் ஏஐ” மிகவும் வேகமாக வளரும் என்று தெரிவித்துள்ளது. ஏஜென்டிக் ஏஐ என்றால் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் கொண்ட AI அவ்வளவுதான். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதற்கு ஊழியர்களின் ஒரு சில செயல்பாடு முக்கியமாக இருந்தது.

ஆனால் இப்போது ஊழியர்களே சொல்லாவிட்டாலும்.. அடுத்தடுத்த வேலைகளைத் தாமாக செய்யும் திறன் கொண்டதுதான் இந்த ஏஜெட்டிக் ஏஐ. பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்கத் தொடங்கியுள்ளன.

IT உலகை ஆக்கிரமிக்கும் ஏஜென்டிக் ஏஐ! இத கத்துக்கலனா எல்லாம் போச்சு! ஆபீஸில் சத்தம் இல்லாமல் நடக்கும் கூத்து!

ஏஜென்ட்டிக் ஏஐ பயிற்சியை பெறுவதற்காக சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை இந்த ஒரு ஆண்டில் மட்டும் அப்படியே இரட்டிப்பாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 57,536 ஊழியர்கள் இந்த அதிநவீன பயிற்சியில் சேர்ந்திருக்கின்றனர். இதில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. இந்திய நிறுவனங்கள் நீண்ட காலமாக AI வரப்போகிறது என்று கூறி வந்ததை வார்த்தையோடு நிறுத்தி விடாமல்.. அதை களத்தில் இறக்க முடிவு செய்துவிட்டன.

இந்த ஏஜென்ட்டிக் ஏஐ சிறப்பாக வேலை செய்வதற்கு பின்னால் நல்ல வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு தேவைப்படும். இதற்கு தான் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டெவொப்ஸ் உதவி வருகின்றன. வெளியான அறிக்கையில் கிளவுட் கம்ப்யூட்டிங் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து 41,876-ஐ எட்டியுள்ளது. இதில் டெவொப்ஸ் ட்ரைனிங் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 26 சதவீதம் அதிகரித்து 31,211 ஆக உள்ளது. மனிதர்கள் வேலை செய்யும் போதே அவ்வப்போது சைபர் அட்டாக்குகள் நடக்கும். இதில் முழுவதுமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் உள்நுழைந்தால் என்னவாகும்? கண்டிப்பாக அதற்கு பாதுகாப்பு வசதிகள் தேவை. எனவே சைபர் செக்யூரிட்டி ட்ரைனிங் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 39 சதவீதம் அதிகரித்து 25,448-ஆக அதிகரித்துள்ளது.

இதில் சர்டிபிகேட் பேஸ்டு ட்ரைனிங் எடுக்கும் ஊழியர்களும் அதிகரித்து வருகின்றனர். நிறுவனங்களும் AI தெரியும் என்று சொன்னால் மட்டும் நம்புவதில்லை. அதற்குரிய சான்றிதழ் இருக்கிறதா? என்றும் எதிர்பார்க்கின்றன. இதன் காரணமாக சான்றிதழ் சார்ந்த படிப்புகளை முடிப்பவரின் எண்ணிக்கையும் 36 சதவீதம் அதிகரித்து 38,562 ஆக மாறி இருக்கிறது

இந்த விதி வெறும் ஊழியர்களுக்கு மட்டுமில்லை தலைமை பொறுப்பில் இருக்கும் மேலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கும் AI தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக லீடர்ஷிப் ட்ரைனிங்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஆக இனிவரும் காலத்தில் ஐடி பிசினஸை முற்றிலும் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வேகமான உலகில் நிறுவனங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பின்தங்கி விடுவோம் என்பதை உணர்ந்து ஊழியர்களும் செயல்பட தொடங்கிவிட்டனர்.

Share This Article

Story first published: Monday, June 22, 2026, 15:47 [IST]

Other articles published on Jun 22, 2026

Read More

Previous Post

கிழக்கு கடலோர ரயில்வேயில் ‘கவாச்’: 631 கி.மீ தொலைவிற்கு ரூ.270 கோடியில் பாதுகாப்புத் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

BUDI95 ஒதுக்கீடு தற்போதைக்கு 200 லிட்டராகவே நீடிக்கிறது. – Malaysiakini

Next Post

BUDI95 ஒதுக்கீடு தற்போதைக்கு 200 லிட்டராகவே நீடிக்கிறது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin