• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel | பெரும்பான்மையை இழந்த நெதன்யாகு… ஆனாலும் ஒரு ட்விஸ்ட்? பரபரப்பில் இஸ்ரேல் தேர்தல் களம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Israel | பெரும்பான்மையை இழந்த நெதன்யாகு… ஆனாலும் ஒரு ட்விஸ்ட்? பரபரப்பில் இஸ்ரேல் தேர்தல் களம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்களை பெற வேண்டியது அவசியம். தபால் வாக்குகள் மற்றும் தூதரக வாக்குகள் நாளைக்குள் எண்ணி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாகத் தெரியாத நிலையிலேயே, நெதன்யாகு மற்றும் ஐசன்கோட் இருவருமே தங்கள் ஆதரவாளர்களிடையே தாங்களே வெற்றியாளர் என அறிவித்துள்ளனர். நெதன்யாகு வலதுசாரி தேசியவாத அரசை அமைக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். அதேவேளையில், அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளதாக ஐசன்கோட் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நெதன்யாகு vs காடி ஐசன்கோட்… இஸ்ரேல் தேர்தலில் வெல்லப்போவது யார்?

இருப்பினும், இரு அணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, யாரால் அரசு அமைக்க முடியும் என்பதை முடிவு செய்வார். மீண்டும் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்க அரசியல் கட்சிகள் சமரசத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தேர்தலில் அரபு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாயிண்ட் லிஸ்ட் மற்றும் ராஆம் கட்சிகள் இணைந்து 19 இடங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Israel Election Results: क्या इजराइल में पहली बार बनेगी अरब पार्टियों के समर्थन वाली सरकार? नेतन्याहू को तगड़ा झटका, अब तक इतनी सीटें

இஸ்ரேல் தேர்தல் களம்

இஸ்ரேலின் மக்கள் தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் அரபு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் ஆதரவு, ஆட்சி அமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு அரபு கட்சிகளின் ஆதரவு உதவக்கூடும் என்றாலும், அவற்றுடன் இணைந்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகளிடையே இதுவரை ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.

ஆனால், ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி நேரடியாக அரசில் பங்கேற்க முடியாது என்றாலும், நெதன்யாகுவின் ஆட்சியை அகற்றுவதற்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதற்கிடையே, அரபு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராஆம் கட்சிக்கு வாக்களிக்கப் பணம் வழங்கப்பட்டதாகவும், வாக்குச்சாவடி ஊழியர்கள் மிரட்டப்பட்டதாகவும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி வாக்களித்ததாகவும் புகார் அளித்துள்ளது.

மறுபுறம், Yisrael Beiteinu கட்சி, நெதன்யாகு தலைமையிலான அரசில் இணையப்போவதில்லை என்றும், அரபு கட்சிகளின் ஆதரவைச் சார்ந்த சிறுபான்மை அரசுக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைக்கும் முயற்சியில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Israel holds first general election since October 7 Hamas attack

நெதன்யாகு

இந்த முட்டுக்கட்டைக்குத் தீர்வாக, நெதன்யாகுவும் எதிர்க்கட்சிகளும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் வாய்ப்பும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கொள்கை வேறுபாடுகள் தொடர்பாக உடன்பாடு எட்டுவது என இதிலும் பல சிக்கல்கள் உள்ளன. காசா போர், பாலஸ்தீனர்களுடனான உறவு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் ராணுவச் சேவையின் சுமையைப் பகிர்வது போன்ற விவகாரங்களிலும் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.

இதையும் படிங்க: DECODE | இஸ்ரேல் தேர்தலில் மெகா ட்விஸ்ட்… நெதன்யாகு ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி?

தற்போதைய நிலையில், நெதன்யாகு பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் அவரிடம் இருக்கிறது. ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் பெரும்பான்மையைப் பெறுவதற்கான பணியில் தீவிரம் காட்டவில்லை. இறுதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்தத் திசையில் செல்லும் என்பது தெரியவரும். எனவே அரபு கட்சிகளின் ஆதரவை எதிர்க்கட்சிகள் ஏற்குமா, தேசிய ஒற்றுமை அரசு அமையுமா அல்லது மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

Read More

Previous Post

தங்க இறக்குமதியில் யூ-டர்ன்.. யாரும் எதிர்பார்க்காத மெகா சரிவு..!! | Massive U-Turn in Gold Imports! India’s September Gold Purchases Plunge 81% Despite Festival Season

Next Post

அரசாங்கத்தின் மானியத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை – Malaysiakini

Next Post

அரசாங்கத்தின் மானியத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin