ஆனால் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா – ஈரான் ஒப்புக்கொண்ட நேரத்தில், “ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகைப்பணியை நீக்காததால், நீரிணையை முழுமையாக மூடுகிறோம்” என ஈரான் தரப்பு தெரிவித்திருந்தது. அதை தற்போது குறிப்பிட்டுள்ள டிரம்ப், “நான் (அமெரிக்கா) ஏற்கெனவே அந்த நீரிணையை முழுமையாக முற்றுகையிட்டுவிட்டேன். அதாவது மூடிவிட்டேன். இதை எப்படி உலகுக்கு சொல்வதென தெரியாமல், தாங்கள்தான் (ஈரான்) நீரிணையை முழுமையாக முடக்கி வைத்துள்ளதாக ஈரான் சொல்லிக்கொள்கிறது” என்றுள்ளார் டிரம்ப்.


